POLLING FLAMES

 

இன்று ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 year ago 24 அக்டோபர் 2024 11:40 AM | views : 227
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது நாள்தோறும் தொடர்கதையாகிவரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ விமான நிறுவனங்களின் தலா 20 விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆகாசா விமான நிறுவனத்தின் 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் கடந்த 11 நாள்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இது குறித்து விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகையில், விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையினருடனும் பேசி வருகிறோம். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளன.

விமான நிறுவனங்களுக்கு வரும் போலியான வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு வேண்டுமென்றே போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை, இனி வாழ்நாள் முழுக்க விமானத்தில் பறக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன..இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 170 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சில விமானங்கள் புறப்பட்ட சில மணி நேரங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.


இது தொடர்பாக, தில்லி காவல்துறை 8 தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறது. இதுபோன்ற போலியான மிரட்டல்களை விடுவோரைக் கண்டுபிடிக்க, காவல்துறையினர் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் நாடியுள்ளனர். இந்த சம்பவங்களால், நாட்டின் விமானப் போக்குவரத்து, கடுமையான பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று இதுபோன்ற மிரட்டல்களால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன, சில ரத்து செய்யப்பட்டன. . மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை PMK காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் AJITH தமிழ்நாடு தேவர் சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் பிரதமர் மோடி KEERTHY SURESH OPS அமமுக கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA TAMIL ACTRESS சூர்யா ஓபிஎஸ் THIRUMAVALAVAN நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா விடுமுறை அஜித் தீபாவளி கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை