POLLING FLAMES

 

வாஷிங்டன் சுந்தர் சூழலில் வீழ்ந்த நியூஸிலாந்து.. தெறிக்க விட்ட தமிழக ஜோடி..

1 year ago 24 அக்டோபர் 2024 11:12 AM | views : 260
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 36 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து பின்தங்கியது. அந்த நிலையில் இரண்டாவது போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு கேப்டன் டாம் லாதமை 15 ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்ததாக வந்த வில் எங்கை 18 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே அடுத்ததாக வந்த ரச்சின் ரவீந்திராவுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்தார். அப்போது அவரையும் 76 ரன்களில் அஸ்வின் அவுட்டாக்கி அசத்தினார்.

ஆனால் மறுபுறம் சென்ற போட்டியில் சதமடித்த ரச்சின் ரவீந்திரா நங்கூரமாக விளையாடி 65 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அப்போது அவரை மேஜிக் பந்தால் தடுப்பை உடைத்து கிளீன் போல்ட்டாக்கிய மற்றொரு தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த டேரில் மிட்சேலை 18 ரன்களில் காலி செய்தார்.

அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த டாம் பிளாண்டல் 3, கிளன் பிலிப்ஸ் 9, டிம் சௌதீ 5, அஜஸ் படேல் 4 ரன்களில் அவுட்டாக்கி 33 ரன்கள் குவித்து சவாலை கொடுத்த மிட்சேல் சான்ட்னரையும் போல்ட்க்கினார். அவருடைய மாயாஜால பந்து வீச்சால் ஒரு கட்டத்தில் 201-4 என்ற வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்தை 259 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்தியாவுக்கு வாஷிங்டன் சுந்தர் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

குறிப்பாக இப்போட்டியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டதற்கு சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் 45 மாதங்கள் கழித்து இப்போட்டியில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய சுந்தர் முதல் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் தனது சிறந்த பந்து வீச்சையும் (7/59) பதிவு செய்து மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.


அத்துடன் அஸ்வின், சுந்தர் ஆகிய இருவருமே வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் ஆவார்கள். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு இன்னிங்சில் இந்தியாவுக்காக 10 விக்கெட்டுகளையும் வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் எடுத்த அரிய சாதனையும் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் அஸ்வினை மிஞ்சும் அளவுக்கு வாஷிங்டன் சுந்தர் அசத்தியுள்ளது தமிழக ரசிகர்களை பெருமையடைய வைக்கிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் தேவர் KEERTHY SURESH பிரதமர் மோடி OPS தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக வன்னியர் சீமான் கைது ஓபிஎஸ் NELLAI நெல்லை THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா கொரோனா TAMIL ACTRESS SURIYA தீபாவளி ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை அன்புமணி விடுமுறை வடகிழக்கு பருவமழை தென்காசி தூத்துக்குடி RAJINIKANTH அஜித் CSK மதுரை