Tamil News & POLLING

 

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிப்பு

1 year ago 20 அக்டோபர் 2024 01:26 PM | views : 158
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK AIADMK TTV DHINAKARAN காங்கிரஸ் TAMIL NADU டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் ADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK கனமழை INDIAN CRICKET TEAM இந்திய அணி சீமான் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் CONGRESS பாமக கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது தீபாவளி வடகிழக்கு பருவமழை COIMBATORE கோவை SEEMAN KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் அமமுக தமிழ்நாடு NELLAI நெல்லை திருநெல்வேலி தென்காசி விடுமுறை கள்ளக்காதல் TAMIL ACTRESS ஓபிஎஸ் AJITH TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN திருமாவளவன் மதுரை டாப் நியூஸ் நடிகை நாடாளுமன்ற தேர்தல் தேவர் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP வன்னியர் NORTHEAST MONSOON OPS திருப்பரங்குன்றம் MADURAI அஜித் கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION THOOTHUKUDI