POLLING FLAMES

 

பாம்பின் விஷம் கொரோனாவிற்கு மருந்து! ஒரு முக்கிய மைல்கல்!

4 years ago 02 செப்டம்பர் 2021 09:32 AM | views : 247
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கொரோனாவிற்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் பாம்பு விஷம் கரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். ஜரரகுசு பிட்விபர் என்ற பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட்விபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால் ஜரரகுசு பிட்விபர் பாம்புகளை பிடிக்கவோ வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, கொரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM பாமக PMK CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது சீமான் OPS KEERTHY SURESH ஓபிஎஸ் AJITH THIRUMAVALAVAN TAMIL ACTRESS சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI நெல்லை SURIYA அஜித் விடுமுறை ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி தென்காசி CSK கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் தீபாவளி