Tamil News & POLLING

 

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

1 year ago 14 ஏப்ரல் 2024 05:26 PM | views : 148
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரிக்க முடிவு செய்து தாம்பரம் போலீசா சம்மன் அனுப்பியுள்ளனர். நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK டிடிவி தினகரன் AIADMK TAMIL NADU காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ADMK TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் PMK முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் CONGRESS கனமழை தமிழகம் பாமக இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் சீமான் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி COIMBATORE கோவை கைது KEERTHY SURESH சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை தீபாவளி EDAPPADI PALANISWAMI அமமுக SEEMAN THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH திருநெல்வேலி விடுமுறை தென்காசி தமிழ்நாடு நெல்லை NELLAI ஓபிஎஸ் கள்ளக்காதல் TAMIL ACTRESS மதுரை THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் நடிகை ELECTION COMMISSION தமிழக அரசு மழை பாலியல் தொல்லை தேவர் வன்னியர் நாடாளுமன்ற தேர்தல் 2024 T20 WORLDCUP ASSEMBLY ELECTIONS டிரெண்டிங் அஜித் வானிலை ஆய்வு மையம் MADURAI டாப் நியூஸ் NORTHEAST MONSOON OPS