POLLING FLAMES

 

கொட்டுக்காளி ஒரு அற்புதமான பகுத்தறிவுக் கதை – புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

1 year ago 21 ஆகஸ்ட் 2024 10:45 AM | views : 218

நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.


முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.இந்த படம் ரசிகர்களையும் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


இந்தப் படமும் சிறப்பான வெற்றியை சூரிக்கு கொடுக்கும் நிலையில் அவர் இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன், சூரி மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இன்று பார்த்துள்ளார். 


படத்தை பார்த்துவிட்டு அவர் படக்குழுவினரை பாராட்டி 3 பக்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இது ஒரு பொக்கிஷம் என்று நெகிழ்ந்துள்ளார்.இந்தக் கடிதத்தில், படத்தில் சூரியை தவிர வேறு தெரிந்த முகங்கள் இல்லை என்று கூறியுள்ள கமல்ஹாசன்,


3 நிமிடங்களுக்கு பிறகு அவரும் தெரியவில்லை. பாண்டியன் என்ற கேரக்டர் மட்டுமே தெரிந்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பின்னணி இசை என்று எதுவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள கமல்ஹாசன், இயற்கைதான் படத்தின் இசை என்பதையும் பாராட்டியுள்ளார். ஆணாதிக்க குறியீடுகளாக சேவல், சீறும் காளை,


பாண்டியன், பூசாரி என பலர் இருந்தாலும் நாயகி அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். கடைசியில் பாண்டியனையும் நம்மையும் இயக்குநர் பகுத்தறிவின் கரையோரமாக மனிதத்தின் விளிம்பில் நிறுத்திவிட்டு சந்தோஷமாக கிளம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு OPS அமமுக AJITH KEERTHY SURESH வன்னியர் சீமான் கைது தேவர் பிரதமர் மோடி ஓபிஎஸ் NELLAI சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA சூர்யா BIGG BOSS TAMIL நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN CSK விடுமுறை தீபாவளி ELECTION COMMISSION பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை அஜித் தூத்துக்குடி அன்புமணி மதுரை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ்