Tamil News & POLLING

 

கமல் தனக்கு மட்டும் பதவி தேடிக்கொண்டார் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

1 hour ago 26 மார்ச் 2026 10:26 AM | views : 46
சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து அதன் பின் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு பொதுமக்கள் வாக்களித்தார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்களது பணத்தை செலவு செய்து அவருக்காக உழைத்தனர். ஆனால் கமலஹாசன் தன்னுடைய சுயநலத்திற்காக தான் மட்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகி விட்டு அவரை நம்பி அவருடைய கட்சியில் உள்ளவர்களை அம்போ என விட்டுவிட்டார்.

இந்த நேரத்தில் நான் கோவை தெற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால் மிக சரியான பதிலை கமலஹாசனுக்கு கொடுத்துள்ளார்கள். தனது கட்சிக்கு கூட விசுவாசமாக இல்லாமல், கட்சியில் உள்ள தொண்டர்களை காப்பாற்ற முடியாத ஒருவர் எப்படி ஒரு கட்சியை ஆரம்பித்து வீணாக போனது என்பதற்கு மக்கள் நீதி மய்யமே சாட்சி ஆகும். புதிதாக கட்சி ஆரம்பிக்கும் எல்லாருக்கும் இவர் நமக்காக வேலை செய்வாரா, நம்முடைய குரலாக தொடர்ச்சியாக பயணிப்பாரா, தனது கொள்கை அரசியல் என்று வரும்போது அதை சமரசம் செய்யாமல் இருப்பாரா என்று பார்ப்பதற்கு கமலஹாசனும் அவருடைய கட்சியும் சிறந்த உதாரணம். யார் எப்படி என்று இந்த கட்சியை பார்த்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK MK STALIN ANNAMALAI டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி ADMK காங்கிரஸ் PMK முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் பாமக உதயநிதி ஸ்டாலின் CONGRESS தமிழக வெற்றிக் கழகம் கனமழை ரஜினிகாந்த் PARLIAMENT ELECTION தமிழகம் COIMBATORE கோவை இந்திய அணி சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சீமான் கைது திருமாவளவன் கொலை AJITH EDAPPADI PALANISWAMI தீபாவளி UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM BIGG BOSS TAMIL அமமுக OPS KEERTHY SURESH பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN TAMIL ACTRESS 2024 T20 WORLDCUP NELLAI விடுமுறை வன்னியர் கள்ளக்காதல் ASSEMBLY ELECTIONS TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தென்காசி தேவர் CSK ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் SURIYA வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் SEEMAN அஜித் தமிழக அரசு MADURAI டிரெண்டிங் ELECTION COMMISSION 2024 டி20 உலக கோப்பை NORTHEAST MONSOON PRIME MINISTER MODI நெல்லை நடிகை