POLLING FLAMES

 

உலக நாயகன் பட்டத்தை துறக்கிறேன் - கமல்ஹாசன் சொல்லும் காரணம் என்ன?

1 year ago 11 நவம்பர் 2024 07:56 AM | views : 236
சென்னை: ‘உலக நாயகன்’ என தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தைத் துறப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு சிறப்பு பட்டம் கொடுத்து விளிப்பதும், திரைத்துறையினரே அவர்களுக்கு பட்டம் கொடுப்பது சினிமாவில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடிப்பு, இயக்கம், பாடகர் என பல்துறை வித்தகராக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டம் உண்டு. அதைத் துறப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'என் மீது கொண்ட அன்பினால் 'உலகநாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் பிரியத்தை மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு.




சினிமா கலை எந்த ஒரு தனிமனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் நான். பிற கலைகளை போலவே சினிமாவும் அனைவருக்குமானது. திறமையான கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்தது தான் சினிமா உருவாகிறது. கதையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் வந்துவிடாத வண்ணம் அவற்றை துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் இன்று ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.






இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சக மனிதர் என்று ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரின் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்று என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் நான்,

கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2024

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்