Tamil News & POLLING

 

கொடநாடு கொலை வழக்கில் சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி!

4 years ago 18 ஆகஸ்ட் 2021 05:56 AM | views : 175
கொடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதில் அரசியல் தலையீடு ஏதுமில்லை என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.



தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து
வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும் அவர்கள் கொடநாடு விவகாரம் தொடர்பாக, அரசு
பொய் வழக்குப் போடுவதாகக் கூறி அமளியில் ஈடுபட்டனர். பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அனுமதியின்றி பேரவையில் அதிமுகவினர் பிரச்சனையை எழுப்பக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். பதாகைகளை கொண்டுவந்து அவையில் அதிமுகவினர் கூச்சல் எழுப்பியது திட்டமிட்ட செயல் என்றும் அதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவர்கள் சபை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்து சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, ’இந்த வழக்கின் விசாரணை, முறைப்படி நீதிமன்ற ஒப்புதலின் அனுமதியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் தலையீடு இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அதிமுகவினர் நடவடிக்கை உள்ளது. கொடநாடு விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசியல் நோக்கத்தோடு செய்யப் படுவதில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணமும் இல்லை என்றார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக TVK BJP அண்ணாமலை தவெக ANNAMALAI AMMK ADMK TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் AIADMK உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM PMK கனமழை UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் சீமான் CONGRESS கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை கைது EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் COIMBATORE KEERTHY SURESH தீபாவளி கோவை அமமுக PARLIAMENT ELECTION TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை திருமாவளவன் TAMIL ACTRESS தென்காசி THIRUMAVALAVAN SEEMAN AJITH ஓபிஎஸ் தமிழ்நாடு மதுரை திருநெல்வேலி நெல்லை NELLAI கள்ளக்காதல் OPS பாலியல் தொல்லை தேவர் 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் MADURAI அஜித் திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS வானிலை ஆய்வு மையம் தமிழக அரசு வன்னியர் ELECTION COMMISSION THOOTHUKUDI NORTHEAST MONSOON