POLLING FLAMES

 

கருணாநிதி உருவ நாணயம் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை!

1 year ago 21 ஆகஸ்ட் 2024 02:19 AM | views : 215
கருணாநிதி உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயத்தை, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, 10,000 ரூபாய் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 500 நாணயங்கள் விற்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.



மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் வெளியிட்டார்.


கருணாநிதி உருவ நாணயம், தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில், தலா 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும், 500 நாணயங்கள், 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

அதேசமயம், கருணாநிதி மீது அன்பும் பாசமும் கொண்ட தொண்டர்கள், 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க, வழிவகை செய்ய வேண்டும் என, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, காதர்மொய்தீன், ஈஸ்வரன் போன்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில், அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று நாணயத்தை வழங்கினார்; இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.


திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள் வெளியூரில் இருந்ததால், அவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் நாணயம் வழங்கப்பட உள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை தமிழகம் CONGRESS கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE வன்னியர் சீமான் KEERTHY SURESH தமிழ்நாடு OPS AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தேவர் கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA சூர்யா NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா ஓபிஎஸ் அஜித் ELECTION COMMISSION தீபாவளி பாலியல் தொல்லை விடுமுறை தென்காசி CSK கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி திருப்பரங்குன்றம் கள்ளக்காதல்