POLLING FLAMES

 

ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்: ஆகஸ்டு 18- சென்னை முழுவதும் உஷார் நிலை

1 year ago 17 ஆகஸ்ட் 2024 09:15 AM | views : 235
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.


இது தொடர்பாக அரக்கோணத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றை கண் ஜெய பால் மற்றும் நெல்லை கூலிப்படையைச் சேர்ந்த ரவுடிகள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் உதவி செய்திருப்பதாக ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த மாதம் 5-ந் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று, சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலுவுடன் கைதானவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

நாளை ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் தரப்பை சேர்ந்தவர்கள் புளியந்தோப்பு வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னை மாநகர் முழுவதும் போலீ சார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக CONGRESS INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை COIMBATORE கொலை திருமாவளவன் தமிழகம் EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி OPS TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு KEERTHY SURESH கைது வன்னியர் தேவர் அமமுக சீமான் சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் AJITH தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS நெல்லை BIGG BOSS TAMIL NELLAI THIRUMAVALAVAN SURIYA ELECTION COMMISSION பாலியல் தொல்லை RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தென்காசி அன்புமணி விடுமுறை CSK தீபாவளி அஜித் தூத்துக்குடி