POLLING FLAMES

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை!

1 year ago 20 ஆகஸ்ட் 2024 08:20 AM | views : 242
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரௌடியிடம் இயக்குநர் நெல்சனின் மனைவி தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.சென்னையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி, படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, ஹரிதரன், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்டோருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரௌடி கும்பல்கள்தான், ஒன்றாக சேர்ந்து இந்த கொலை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவாக உள்ளார்.இந்த நிலையில், ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கூறி, இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து, மோனிஷாவை நேரில் வரவழைத்த காவல்துறையினர், மொட்டை கிருஷ்ணனிடம் எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என்ன விவகாரம் குறித்து பேசப்பட்டது? என்றெல்லாம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால்தான், தங்கள் வழக்குகள் தொடர்பாக, அவரிடம் பேச வேண்டியிருந்தது; மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மோனிஷா விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.மேலும், நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்