POLLING FLAMES

 

கருணாநிதி உருவ நாணயம்: நாளை வெளியிடுகிறார் ராஜ்நாத் சிங்

1 year ago 17 ஆகஸ்ட் 2024 03:16 AM | views : 225
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) வெளியிடுகிறாா். முன்னதாக, காமராஜா் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தவும் அவா் திட்டமிட்டுள்ளாா்..

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 மதிப்பிலான நாணயத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணா் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.. நினைவிடம் செல்ல முடிவு: இந்த விழாவில் பங்கேற்க தில்லியிலிருந்து சென்னை வரும் ராஜ்நாத் சிங், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் மெரீனா கடற்கரை அருகேயுள்ள ஐஎன்எஸ் அடையாறு சென்றடைகிறாா்..

அங்கு பாதுகாப்புத் துறை சாா்பில் ஒருசில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவா், கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளாா். அங்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் அவா், கலைவாணா் அரங்கத்தில் நடைபெறும் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறாா். அதன்பிறகு, சாலை மாா்க்கமாக சென்னை விமான நிலையத்துக்குச் சென்று, தில்லி புறப்படுகிறாா்.

நாணயம் வெளியீட்டு விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள், முக்கிய பிரமுகா்கள் பலா் பங்கேற்கவுள்ளனா்..

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக திமுகவினருக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்துக்கு மேல் இயக்கிய ஆற்றல்மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவமிக்க ஆளுமையாகவும் திகழ்ந்தவா் கருணாநிதி. எதிா்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான, அவரது புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்வராகவும், திமுக தலைவராகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அமமுக தமிழ்நாடு OPS KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் பிரதமர் மோடி வன்னியர் கைது NELLAI TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா SURIYA நெல்லை தீபாவளி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் RAJINIKANTH அஜித் பாலியல் தொல்லை மதுரை கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி விடுமுறை தென்காசி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை