POLLING FLAMES

 

இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்ற இலங்கை!

1 year ago 07 ஆகஸ்ட் 2024 05:29 PM | views : 227
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரியான் பராக் அறிமுகமானார்.

பதும் நிசங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர்.

அணியின் ஸ்கோர் வேகமாக உயரவில்லை என்றாலும், விக்கெட்டை இழக்காமல் இருவரும் நிதானமாக விளையாடினார்கள்.

இதன் பிறகு 89 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அக்‌ஷர் படேல் பிரித்தார்.

பதும் நிசங்கா 65 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் பிறகு அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன், குசால் மெண்டிஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த கூட்டணியும் 89 ரன்கள் சேர்த்தது.

அவிஷ்கா ஃபெர்னாண்டோ 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 102 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து நூலிழையில் சதத்தைத் தவறவிட்டு பராக் பந்தில் வெளியேறினார்.

அடுத்ததாக குசால் மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு அடுத்தடுத்து வேகமாக விக்கெட்டுகள் விழுந்தன.

38 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்த இலங்கை அணியால் 50 ஓவர்கள் முடிவில் 248 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அசலங்கா 10, சமரவிக்ரமா 0, லியானகே 8, வெல்லாலகே 2 ரன்களில் வெளியேறினர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர் தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.

வெல்லாலகேவின் சிறப்பான பந்துவீச்சில் வீழ்ந்தது இந்திய அணி.

ரோஹித் சர்மா 35 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களும் எடுத்தனர்.

மற்றபடி கில் 6, ரிஷப் பந்த் 6, கோலி 20, அக்‌ஷர் படேல் 2, ஸ்ரேயஸ் ஐயர் 8, பராக் 15, துபே 9 ரன்களில் வேகவேகமாக வெளியேற இந்திய அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அற்புதமாகப் பந்துவீசிய வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது.

மேலும், கடைசியாக 1997-ல் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக கைது ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION அஜித் திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை