POLLING FLAMES

 

தகுதியற்ற இலங்கை அணியிடம் நம்பர் ஒன் அணியான இந்தியா தோத்துடுச்சே.. ரசிகர்கள் வேதனை

1 year ago 08 ஆகஸ்ட் 2024 07:50 AM | views : 222
இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் அதன் வாயிலாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியை பதிவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

குறிப்பாக முதல் போட்டியிலேயே வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசியில் வெறும் 231 ரன்களை தொட முடியாமல் சமன் செய்தது. 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 241 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் 3வது போட்டியில் அதை விட மோசமாக விளையாடிய 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

தகுதியில்லாத இலங்கையிடம்:
அதனால் 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோற்றது. இத்தனைக்கும் இலங்கையை விட இந்திய அணியில் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட வீரர்களால் கூட வெறும் 250 ரன்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்திய அணி டாப் 5 இடங்களில் கூட இல்லாத இலங்கையிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அதை விட 2023 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய இலங்கை அணியால் டாப் 8 இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

அதன் காரணமாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு வரலாற்றிலேயே முதல் முறையாக இலங்கை தகுதி பெறவில்லை. ஆனால் தற்போது 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட தகுதியற்ற இலங்கை அணியிடம் நம்பர் ஒன் அணியான இந்தியா மண்ணைக் கவ்வியுள்ளது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே இன்னும் 6 மாதத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெற உள்ளது.


ஆனால் அதற்கு முன்பாக இந்தியா வெறும் 3 ஒருநாள் போட்டியில் மட்டுமே அதுவும் 2025இல் விளையாட உள்ளது. ஆனால் தற்போது தோல்வியை சந்தித்துள்ள இந்தியா அதற்குள் எப்படி தங்களுக்கு தேவையான தரமான வீரர்களையும், அவர்களுக்கு தகுந்த இடத்தையும் கண்டுபிடிக்கப் போகிறது? என்பது கேள்விக்குறியாகும். எனவே இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியாவை புதிய பயிற்சியாளர் கம்பீர் வெற்றி நடை போட வைப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை தமிழகம் CONGRESS கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE வன்னியர் சீமான் KEERTHY SURESH தமிழ்நாடு OPS AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தேவர் கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA சூர்யா NELLAI நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா ஓபிஎஸ் அஜித் ELECTION COMMISSION தீபாவளி பாலியல் தொல்லை விடுமுறை தென்காசி திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி CSK கள்ளக்காதல்