POLLING FLAMES

 

மகளிர் உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

6 months ago 24 அக்டோபர் 2025 01:34 AM | views : 235
மும்பை:

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

நவி மும்பையில் இன்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளான பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து, 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. மழை காரணமாக 44 ஓவரில் 325 ரன்கள் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

அந்த அணியின் புருக் ஹாலிடே தனியாளாகப் போராடி 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு வீராங்கனை இசபெல்லா கடைசி வரை போராடி 65 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், நியூசிலாந்து 45 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் பாமக PMK தமிழகம் CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE AJITH தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் கைது தேவர் OPS சீமான் அமமுக KEERTHY SURESH நெல்லை SURIYA சூர்யா ஓபிஎஸ் கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN தென்காசி கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை மதுரை அஜித் விடுமுறை ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி CSK கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் தீபாவளி RAJINIKANTH அன்புமணி