POLLING FLAMES

 

கனமழை காரணமாக கேரளாவில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

1 year ago 31 ஜூலை 2024 03:23 PM | views : 215
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன.

தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,300-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்றும் கேரளாவில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திருச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


இதற்கிடையில், குடியிருப்பு பள்ளிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும், முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை தமிழகம் திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு வன்னியர் அமமுக OPS சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது KEERTHY SURESH தேவர் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கொரோனா SURIYA AJITH ஓபிஎஸ் NELLAI நெல்லை சூர்யா விடுமுறை வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி அஜித் தூத்துக்குடி கள்ளக்காதல் CSK தீபாவளி கீர்த்தி சுரேஷ் மதுரை தென்காசி RAJINIKANTH பாலியல் தொல்லை