POLLING FLAMES

 

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் : உரிய விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

1 year ago 26 ஜூன் 2024 04:36 AM | views : 240
அ.ம.மு.க. பொதுச்செயாலளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி, திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

தாரணியை இழந்துவாடும் பாலாஜியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த தாரணியை உடனடியாக பார்க்கச் சென்றபோது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து தாரணி தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை பாலாஜி திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தாரணியின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை தமிழகம் திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு வன்னியர் அமமுக OPS சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது KEERTHY SURESH தேவர் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கொரோனா SURIYA AJITH ஓபிஎஸ் NELLAI நெல்லை சூர்யா விடுமுறை வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி அஜித் தூத்துக்குடி கள்ளக்காதல் CSK தீபாவளி கீர்த்தி சுரேஷ் மதுரை தென்காசி RAJINIKANTH பாலியல் தொல்லை