POLLING FLAMES

 

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

1 year ago 30 மே 2024 06:11 AM | views : 231
பி.பி.டி.சி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்-ன் (பி.பி.டி.சி.எல்.) மாஞ்சோலை, மணிமுத்தாறு மற்றும் ஊத்து தேயிலைத் தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிங்கம்பட்டி குரூப்பில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், சிங்கம்பட்டி குரூப்பின் வணிகத்தை நிலைதிருத்தமான முறையில் மேலாண்மை செய்வதற்கு உதவ பி.பி.டி.சி.எல். வெளிப்படுத்தும் விருப்ப பணி ஓய்வு திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது தகுதியின் அடிப்படையில் பலன்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அதனை தேர்வு செய்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

விருப்ப பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பி.பி.டி.சி.எல். நிறுவனமானது சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய பலன்கள் மட்டுமல்லாது அதனோடு சேர்த்து கருணைத் தொகையும் மற்றும் 2023-2024 -ம் நிதி ஆண்டிற்கான சட்டப்படியிலான போனஸ் தொகையும் (மிகை ஊதியம்) இணைத்து வழங்கப்படும் விருப்ப பணி ஓய்விற்கான அனைத்து வழிமுறைகளும் தீர்வு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்கும் அனைத்து தொழிலாளர்களும் அதில் கையொப்பமிட வேண்டும்.

தகுதிவாரிகளின் அடிப்படையில் அதற்கான தலைப்பின்படி வழங்கப்படும் பணப்பலன்கள் பற்றிய விபரங்கள் விருப்ப ஓய்விற்கான திட்டத்தில் தெளிவாக கோடிட்டு காண்பிக்கப்பட்டு விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர்கள் பெறுகின்ற பணப்பலன் உண்மையான தொகையினை உறுதி செய்யும் வகையில் தனித்தனியாக கடிதங்கள் கொடுக்கப்படும்.

தீர்வு ஒப்பந்தத்தின் நகலும் மற்றும் விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்ப படிவமும் மாஞ்சோலை மணிமுத்தாறு மற்றும் ஊத்து எஸ்டேட் அலுவலகத்திலும் தேயிலை தொழிற்சாலை அலுவலகத்திலும் தொழிலாளர்களின் பார்வைக்காக 14.06.2024 வரை வைக்கப்படும். தொழிலாளர்கள் தங்களது விருப்ப ஓய்விற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள் 14.06.2024 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தேவர் பிரதமர் மோடி OPS வன்னியர் அமமுக தமிழ்நாடு KEERTHY SURESH AJITH கைது கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS SURIYA நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் விடுமுறை அன்புமணி அஜித் தென்காசி ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் CSK மதுரை கள்ளக்காதல் தீபாவளி RAJINIKANTH திருப்பரங்குன்றம் தூத்துக்குடி பாலியல் தொல்லை