POLLING FLAMES

 

தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு

1 year ago 09 மே 2024 03:22 AM | views : 271
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிவகுமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது தம்பி தேவேந்திரன் (30). நேற்று மதியம் தனது வீட்டின் அருகே சிவகுமார் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென தம்பி தேவேந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் சிவகுமாரை வெட்ட முயன்றார். உடனே சிவகுமார் அங்கிருந்து தப்பி பக்கத்தில் உள்ள வயல்வெளியில் ஓடினார். ஆனாலும் விடாமல் தேவேந்திரன் தனது நண்பர்களுடன் சிவகுமாரை ஓட ஓட துரத்தி சென்று பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டினார்.வெட்டுகாயம் அடைந்த சிவகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அண்ணனை படுகொலை செய்த தப்பி தேவேந்திரன் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவேந்திரனிடம் விசாரணை நடத்தினர். அதில், எனது மாமியாருக்கும் அண்ணன் சிவகுமாருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை பலமுறை கண்டித்தும் சிவகுமார் கள்ளக்காதலை விடவில்லை. தொடர்ந்து எனது மாமியாருடன் தகாத உறவில் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். தேவேந்திரனை கைது செய்த போலீசார் அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகனை தேடி வருகின்றனர். தம்பியின் மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் கைது தேவர் AJITH தமிழ்நாடு சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் நெல்லை SURIYA கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி அன்புமணி கள்ளக்காதல் தீபாவளி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அஜித்