POLLING FLAMES

 

பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய தகவல்கள்!

4 years ago 03 ஆகஸ்ட் 2021 03:28 PM | views : 305
சின்னத்திரை வரலாற்றில், மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு சிக்கக்களுக்கிடையே, பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது.


கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4 முடிந்த உடனேயே அடுத்த சீசன் எப்போது வரும் என்ற கேள்வி எழும்பியது. 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியும் தொடங்கி விட்ட நிலையில், ஊரடங்கும் தளர்வுகளுடன் இருக்கின்ற சூழலில். அடுத்த சீசன் எப்போது தொடங்கப்போகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 க்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுவதும் நீங்காத சூழலில், நிகழ்ச்சி தொடக்கம் பற்றி இன்னும் முடிவு செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ஆனால், சமீபத்திய கிடைத்துள்ள தகவல், பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.


ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும், பிக்பாஸ் 5 ஆவது சீசனுக்கு லோகோ தயாராகி விட்டது என்றும், இந்த மாதம் இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய அதிகாரபூர்வமான தகவல் வெளியாகலாம்.

அது மட்டுமின்றி, கடந்த சீசனைப் போலவே, இந்த சீசனிலும் நிறைய புதுமுகங்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், சீரியல் நடிகர் ஒருவர் பிக்பாசில் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளது.


சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒருவர், இந்த சீசனில் பங்கேற்பது உறுதி என்று கூறப்படுகிறது. மற்ற பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல், புதிய செட், நிகழ்ச்சி தொடக்கம், அது மட்டுமின்றி, நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொகுத்து வரும் நடிகர், பன்முகக் கலைஞர் கமலஹாசனின் கெட்டப் போன்றவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும்.


அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருப்பு, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது, என்ற மிகப்பெரிய திருவிழாவி கலந்து கொள்வது போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் இருக்கும்.


கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவராஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் AJITH தேவர் தமிழ்நாடு சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் பிரதமர் மோடி அமமுக KEERTHY SURESH OPS கைது THIRUMAVALAVAN NELLAI சட்டசபை தேர்தல் சூர்யா TAMIL ACTRESS BIGG BOSS TAMIL ஓபிஎஸ் நெல்லை கொரோனா SURIYA தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை CSK தூத்துக்குடி திருப்பரங்குன்றம் தீபாவளி கீர்த்தி சுரேஷ் அஜித் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அன்புமணி