பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்ற விக்ரமன் பற்றிய முக்கிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். அறம் வெல்லும் என்ற ஒற்றை சொல்லை வைத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருந்தார். கடைசி வரை விக்ரமன் தான் ஜெயிப்பார் என்று நினைத்திருந்த வேளையில் அசீம் டைட்டிலை கைப்பற்றினார். இதற்கு பல எதிர்ப்புகளும் எழ தான் செய்தது.
ஆனால் அசீம் அதை கண்டுகொள்ளவே கிடையாது. என்ன தான் விக்ரமன் இப்பொழுது அரசியலில் இருந்தாலும் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து வந்தவர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் EMI தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியலிலும் அவரது உண்மை குணத்திற்கு ஏற்றவாறு தான் கதைக்களம் அமைந்திருக்கும்.
அந்த சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து வந்தவர் தான் நம்ம பாவனி. இந்த சீரியலில் இடம்பெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெரியவர் காபி கொடுக்க வர அப்பொழுது அந்த காபி பாவனியின் காலில் சிந்தி விட அதனை துடைக்க சொல்கிறார்
அப்பொழுது வரும் விக்ரமன் உன் அப்பா வயசு இருக்க மனுஷனை ஷூ துடைக்க சொல்ற என்று அறைய போகிறார். அதன் பிறகு உன் அடிச்சா அது எனக்கு தான் அசிங்கம் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் இப்படி நேர்மை குணமுடையவரு தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.