POLLING FLAMES

 

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை, 14,000 ரன்கள்

4 years ago 13 ஜூலை 2021 02:41 AM | views : 235
டி20 கிரிக்கெட்டில், உலகின் சிறந்த வீரராக கருதப்படும் கிறிஸ் கெய்ல், ரசிகர்களால் ’யுனிவெர்சல் பாஸ்’ என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், வெஸ்ட் இண்டீஸின் கரீபீயன் ப்ரீமியர் லீக், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டிராபி உள்ளிட்ட பல்வேறு டி20 தொடர்களில் கிறிஸ் கெய்ல் விளையாடியுள்ளார்.

இதுவரை 431 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 67 ரன்கள் விளாசியபோது அவர், இந்த மைல்கல்லை எட்டினார்.

37.55 சராசரியுடன், 1,083 பவுண்டரிகள், 1,028 சிக்சர்களுடன் இந்த சாதனையை கெய்ல் படைத்துள்ளார். அதே போல், 22 சதங்களையும் கெய்ல் அடித்துள்ளார். அதிக சிக்சர்கள், ஒரு போட்டியில் அதிக ரன்கள், அதிக சதங்கள், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகள் கெய்ல் வசம் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் யுனிவர்சல் பாஸின் புதிய சாதனைக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU இந்திய அணி PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கனமழை பாமக ரஜினிகாந்த் CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் கைது OPS KEERTHY SURESH TAMIL ACTRESS கொரோனா தீபாவளி SURIYA ஓபிஎஸ் AJITH NELLAI சூர்யா நெல்லை THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி திருப்பரங்குன்றம் தென்காசி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் மதுரை ELECTION COMMISSION அஜித் கள்ளக்காதல் CSK விடுமுறை வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை RAJINIKANTH