POLLING FLAMES

 

100 கோடி தடுப்பூசி செலுத்தி பிரதமர் மோடி சாதனை

4 years ago 21 அக்டோபர் 2021 09:22 AM | views : 252
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி பிரதமர் மோடி மகத்தான சாதனை செய்துள்ளார் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.

இது குறித்து கூறியதாவது, "கொரோனாவின் ஆரம்பத்தில் என்.95 மாஸ்க் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்தோம், தற்போது மாஸ்க், பி.பி.இ கிட் உள்ளிட்டவை தயாரித்து நாம் பிறருக்கு வழங்கி வருகிறோம்.

தற்போது உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து அதை 100 கோடிக்கு மேலாக செலுத்தியுள்ளோம், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது இது பிரதமரின் சாதனை ஆகும்.

ஆரம்பத்தில் தமிழகத்தில் தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசியல் செய்யப்பட்டது, ஆனால் தற்போது அதை எல்லாம் கடந்து தமிழகத்திலும் 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடும்பனிப்பொழிவு நேரத்தில் காஷ்மீரில் தொடங்கி, லட்சத்தீவு, அருணாச்சல் பிரதேசம், வனப்பகுதியில், மலை பிரதேசங்களில் வசிப்பவர்கள், தொலை தூரப்பகுதியில் வசிப்பவர்கள் என அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

100 கோடி தடுப்பூசி என்பது ஒரு மகத்தான மைல் கல் ஆகும், இதற்காக பிரமருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

யாரேனும் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் அவரை.கள் எந்த அச்சமும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இன்னமும் கொரோனா பாதிப்பு உள்ளது, எனவே திருவிழா ,பண்டிகை நேரம் என்பதால் கவனமுடன் மக்கள் இருக்க வேண்டும்" என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை திருமாவளவன் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் COIMBATORE தேவர் தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM கைது வன்னியர் அமமுக KEERTHY SURESH சீமான் OPS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS AJITH சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சூர்யா தீபாவளி கள்ளக்காதல் CSK அஜித் விடுமுறை தென்காசி தூத்துக்குடி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை RAJINIKANTH மதுரை வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் அன்புமணி