POLLING FLAMES

 

சிக்கன் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய் மகள் பலி!

4 years ago 13 அக்டோபர் 2021 05:10 AM | views : 265
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கற்பகவல்லி(34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கற்பகவல்லி தனது மகளுடன் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று சிக்கன்கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்து வைத்திருந்த உணவுடன் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது லேசான வயிர் எரிச்சல் இருந்த காரணத்தினால் அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு குளிர்பானம் வாங்கி கற்பகவல்லி மற்றும் அவரது மகள் தர்ஷினி இருவரும் அருந்தியுள்ளனர். குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து உறவினர்கள் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்குள்ளாக சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர்.

மேலும் கோவில்பட்டி டி.எஸ்.பி. உதயசூரியன், ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் கற்பகம் வீடு, குளிர்பானம் மற்றும் கிரேவி வாங்கிய கடையில் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு மற்றும் குளிர்பானம் பாட்டில் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

சிக்கன் கிரேவி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வுக்கு பின்னர் கிரேவி சாப்பிட்டதால் உயிரிழந்தனரா அல்லது இறப்புக்கு குளிர்பானம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS கோவை கொலை தமிழகம் COIMBATORE திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI வன்னியர் தமிழ்நாடு பிரதமர் மோடி சீமான் KEERTHY SURESH OPS கைது அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் SURIYA AJITH THIRUMAVALAVAN தீபாவளி சூர்யா NELLAI BIGG BOSS TAMIL நெல்லை கொரோனா கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் CSK தூத்துக்குடி விடுமுறை பாலியல் தொல்லை அஜித் ELECTION COMMISSION தென்காசி அன்புமணி மதுரை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை