POLLING FLAMES

 

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

6 months ago 28 அக்டோபர் 2025 06:35 AM | views : 317
குருவாயூர்-சென்னை விரைவு ரெயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரெயிலாக உள்ளது. இந்த ரெயில் கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில், இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரெயில் வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், "தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரெயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 மணிக்கு புறப்படும். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் ரெயில் இரவு 8.18 மணிக்கு வாஞ்சி மணியாச்சிக்கு சென்று, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

அதே போல், மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரெயில் (16128) தினமும் காலை 9.28 மணிக்கு வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, அங்கிருந்து 9.39 மணிக்கு கடம்பூர் சென்று, காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.56 மணிக்கு கோவில்பட்டி சென்றடையும். அங்கிருந்து காலை 9.58 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையங்களில் குருவாயூர் விரைவு ரெயில் நிற்கும் என்ற அறிவிப்புக்கு சுற்றுவட்டார பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடம்பூரில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிற்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு OPS அமமுக AJITH KEERTHY SURESH வன்னியர் சீமான் கைது தேவர் பிரதமர் மோடி ஓபிஎஸ் NELLAI சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA சூர்யா BIGG BOSS TAMIL நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN CSK விடுமுறை தீபாவளி ELECTION COMMISSION பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை அஜித் தூத்துக்குடி அன்புமணி மதுரை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ்