POLLING FLAMES

 

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

1 year ago 31 அக்டோபர் 2024 04:15 PM | views : 346
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.

அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.

முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது.

இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.

அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.

இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு இன்று இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் பாமக PMK தமிழகம் CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை தமிழ்நாடு பிரதமர் மோடி வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH கைது OPS சீமான் தேவர் அமமுக KEERTHY SURESH NELLAI SURIYA சூர்யா ஓபிஎஸ் கொரோனா TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் நெல்லை THIRUMAVALAVAN தென்காசி வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION அஜித் மதுரை விடுமுறை பாலியல் தொல்லை கள்ளக்காதல் CSK RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் அன்புமணி தீபாவளி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி