Tamil News & POLLING

 

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்

1 year ago 06 பிப்ரவரி 2025 03:31 AM | views : 160
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.

« முந்தைய செய்தி (Previous)

உச்சகட்ட பரபரப்பில்...
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை அமமுக KEERTHY SURESH தீபாவளி COIMBATORE கோவை SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கைது சட்டசபை தேர்தல் THOOTHUKUDI திருநெல்வேலி TAMIL ACTRESS NELLAI கள்ளக்காதல் மதுரை ஓபிஎஸ் திருமாவளவன் THIRUMAVALAVAN தமிழ்நாடு விடுமுறை நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM AJITH தென்காசி TAMIL CINEMA MADURAI NORTHEAST MONSOON தமிழக அரசு டாப் நியூஸ் டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN நயினார் நாகேந்திரன் தேவர் ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP பாலியல் தொல்லை OPS திருப்பரங்குன்றம் கொரோனா வானிலை ஆய்வு மையம் வன்னியர் அஜித் ELECTION COMMISSION