POLLING FLAMES

 

ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!

1 year ago 02 டிசம்பர் 2024 11:22 AM | views : 240
நடிகர் ஜெயம் ரவி  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ரிஜெக்ட் செய்த ஒரு பாடலை தான் வித்யாசாக இசையில் வெளியான தளபதி விஜய் படத்திற்கு கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார் யுகபாரதி என்பது பலருக்கும் தெரியாத தகவல்.


இயக்குனர் மோகன் ராஜா, சுச்சுவேஷன் சொல்ல ஸ்ரீகாந்த் தேவா ஒரு காதல் பாடலை இசையமைத்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும் உடன் இருக்க. யுகபாரதி 'கண்டேன் கண்டேன் உன் காதல் நான் கண்டேன்' என எழுத, மோகன் ராஜா வார்த்தைகள் கொஞ்சம் டிரெண்டியா வேணும் அப்படின்னு செல்கிறார். உடனே யுகபாரதி 'கண்டேன் கண்டேன்'  என்கிற வார்த்தையை எல்லாவற்றையும் தூக்கி விட்டு ஐயோ ஐயோ உன் கண்கள் அய்யய்யோ அப்படின்னு சொல்லி... சில வார்த்தைகளை மாற்றி பட்டி டிக்கரிங் செய்து, இந்த பாடலை கொடுக்கிறார்.






இந்த பாடல் மோகன் ராஜாவுக்கு மட்டும் அல்ல, ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் மிகவும் பிடித்து போனது. மேலும் இந்த பாடலும் வெளியாகி இளம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்க பட்ட பாடலாக மாறியது. 




இந்த பாடலை யுகபாரதி எழுதிய அதே நாள் ஈவினிங் வித்யாசாகர், யுகபாரதிக்கு கால் பண்ணி ஏதாவது பாட்டு பல்லவி வச்சிருக்கியா? அப்படின்னு கேட்க. இருக்கே அப்படின்னு சொல்லி அந்த தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வந்த 'மதுர' படத்திற்கு 'கண்டேன் கண்டேன்' பாடலை கொடுத்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே இந்த பாடல் வரிகள் இருந்ததால் வித்யா சாகர் ஷாக் ஆகிவிட்டார். இந்த பாடலும் தளபதிக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.






இந்த இரண்டு பாடல்களை நீங்கள் இப்போது கேட்டாலும், ஒரு மாதிரியான தாக்கம் இருக்கும். அதற்க்கு காரணம். இரண்டு பாடல்களுமே ஒரு சில வார்த்தைகளை மட்டுமே மாற்றி பட்டி டிங்கரிங் செய்த பாடல். ஆனால் தனித்தனியாக கேட்டால் யாராலும் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுவே யுகபாரதி வரிகளின் மிகப்பெரிய வெற்றி எனலாம். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கொலை COIMBATORE திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH OPS பிரதமர் மோடி கைது தமிழ்நாடு சீமான் தேவர் வன்னியர் அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சூர்யா ஓபிஎஸ் மதுரை அன்புமணி ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி விடுமுறை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அஜித் தென்காசி பாலியல் தொல்லை RAJINIKANTH