லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவின் மீது அறிஞர்கள் வைத்துள்ள மரியாதையை லண்டனில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
தவெக தலைவர் விஜய் தனது கருத்துகளை மக்கள் முன்பு வைக்கும்போது நாங்களும் கருத்து கூறுவோம். விஜயை கேள்வி கேட்கும் நேரத்தில் நாங்கள் நிச்சயமாக கேள்வி கேட்போம்.
விஜயின் சித்தாந்தங்கள் திராவிட கட்சிகளை போன்று தான் உள்ளது. தவெக மாநாட்டுக்குப் பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை தியாகி போல் கொண்டாடுவதா ?
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக சரித்திர தேர்தலாக இருக்கும்.
தமிழக பாஜகவில் கடந்த 3 மாதமாக நிறைய வேலைகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S