POLLING FLAMES

 

2036 ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த இந்தியா

1 year ago 05 நவம்பர் 2024 10:10 AM | views : 230
புதுடெல்லி:

உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.

அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.

2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU INDIAN CRICKET TEAM கனமழை UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் வன்னியர் தமிழ்நாடு தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் அமமுக OPS கைது பிரதமர் மோடி NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் சூர்யா நெல்லை AJITH SURIYA கொரோனா RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் பாலியல் தொல்லை விடுமுறை CSK ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி தென்காசி அஜித் வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி