Tamil News & POLLING

 

நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!

1 year ago 05 நவம்பர் 2024 04:20 PM | views : 171
மதுரை: நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.

தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் ரமேஷ், மற்றும் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் எந்த மொழி, இன பாகுபாடின்றி அனைவரும் சமமாக அமைதி, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கடந்த 3ம் தேதி நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் இனமான எங்களது நாயுடு குல சமுதாய பெண்களை இழிவுச்சொல் கூறியும், இன குலத்தோர், நாடாண்ட மன்னர்களையும் இழிவுப்படுத்து நோக்கிலும் பேசியுள்ளார். தமிழக மக்களிடம் பிரிவினை, இனப்பிரச்சினையை தூண்டிவிடும் உள்நோக்கத்தோடு சாதிய இழிச் சொற்களை பேசி, எங்களது சமுதாய மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியுள்ளார்.






அவரது சுய விளம்பரத்திற்காக, சிலரின் பின்புலத்தில் செயல்பட்டுள்ளார். ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சட்டம், ஒழுங்கை சீர் கெடுக்கும் எண்ணத்துடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவச் சொற்களை அவர் பேசியுள்ளார். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்பட்ட நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளனர். நிர்வாகிகள் கூறுகையில், “நடிகை கஸ்தூரியின் பேச்சு உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிடின் நவ.,10ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றனர்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK AIADMK டிடிவி தினகரன் MK STALIN உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN PMK சீமான் பாமக ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி CONGRESS வடகிழக்கு பருவமழை COIMBATORE அமமுக PARLIAMENT ELECTION KEERTHY SURESH NELLAI சட்டசபை தேர்தல் கோவை தீபாவளி கொலை கைது EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு திருநெல்வேலி TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை கள்ளக்காதல் விடுமுறை திருமாவளவன் நெல்லை THIRUMAVALAVAN தென்காசி OPS AJITH THOOTHUKUDI SEEMAN வன்னியர் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் TAMIL CINEMA தமிழக அரசு ஓபிஎஸ் 2024 T20 WORLDCUP கொரோனா கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN MADURAI வானிலை ஆய்வு மையம் ELECTION COMMISSION NORTHEAST MONSOON டாப் நியூஸ் தேவர் அஜித் நடிகை டிரெண்டிங்