POLLING FLAMES

 

மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்

1 year ago 18 அக்டோபர் 2024 04:21 AM | views : 223
பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.

பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக முக ஸ்டாலின் கோவை CONGRESS PARLIAMENT ELECTION கொலை திருமாவளவன் தமிழகம் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI அமமுக KEERTHY SURESH சீமான் OPS TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி தமிழ்நாடு வன்னியர் தேவர் கைது SURIYA BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN NELLAI கொரோனா AJITH சூர்யா நெல்லை பாலியல் தொல்லை விடுமுறை RAJINIKANTH ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி அஜித் வடகிழக்கு பருவமழை CSK கள்ளக்காதல் தீபாவளி தூத்துக்குடி மதுரை தென்காசி கீர்த்தி சுரேஷ்