POLLING FLAMES

 

நடிகை வனிதாவுக்கு விரைவில் நான்காவது திருமணம் !

1 year ago 01 அக்டோபர் 2024 11:22 AM | views : 250
விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் அதன்பின் மாணிக்கம், நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய வனிதா விஜயகுமார், ஏதோ ஒரு சர்ச்சையில் சிக்கி எப்போதும் லைம் லைட்டில் இருப்பார்.

இவர் திருமணம் குறித்த சர்ச்சைகள் எப்போதும் மீடியாவில் பரபரப்பாக பேசப்படும்.பிக் பாஸ் சென்ற வனிதா விஜயகுமார் அதன் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பேசுபொருள் ஆனார். பிக் பாஸில் இருந்து வெளியே வந்த வனிதா விஜயகுமாருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 17 படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அவர் கமிட்டானார்.


அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகைகளில் இவரும் ஒருவர். அதேசமயம் இவருடைய பர்சனல் வாழ்க்கையை பற்றிய செய்திகளும் ரசிகர்களிடம் அதிக கவனம் பெறும். முதலில் ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்ட வனிதா, அவரை விவாகரத்து செய்து ராஜன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்து ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பின் பால்ராஜ் என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்தார். இந்த நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ராபர்ட் மாஸ்டரை வனிதா விஜயகுமார் கடற்கரை ஓரத்தில் வைத்து புரோபோஸ் செய்வது போன்றும் அக்டோபர் 5-ம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அதில் எழுதி இருந்தது. பார்ப்பதற்கு திருமண அழைப்பிதழ் போலவே இருப்பதால் வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணமா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருவதால் இது அந்த படத்திற்கான அழைப்பிதழாகவும் இருக்கலாம் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். இதில் எது உண்மை என்பது அக்டோபர் 5ஆம் தேதி தெரிந்துவிடும். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்