POLLING FLAMES

 

வாழை பட கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவில்லை : எழுத்தர் சோ.தர்மன்

1 year ago 29 ஆகஸ்ட் 2024 02:54 PM | views : 222
நல்ல கதைதான்... வாழை கதை விவகாரம்;  சோ.தர்மனுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்


கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான படம் வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.


படத்தை பார்த்த இயக்குநர்கள், பொதுமக்கள் என அனைவரும் படத்தை பாராட்டியே பேசியிருந்தனர். இயக்குநர் பாலா, நடிகர் சூரி ஆகியோர் மாரி செல்வராஜை கட்டிபிடித்து முத்தமிட்டு பாராட்டியது பெரிதும் பேசப்பட்டது.


இதனிடையே, வாழை திரைப்படம் தன்னுடைய சிறுவயதில் நடந்த சம்பவம் என்றும், வாழைத்தாரை சுமந்து சென்ற தனது சகோதரியின் நினைவாக இந்த படத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.


இந்த நிலையில், வாழை திரைப்படம், 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதையின் தொகுப்பு என்று சாகித்ய அகாடமி விருத  வென்ற எழுத்தாளர் சோ.தர்மன்  தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் நீர்ப்பழி எனும் சிறுகதையின் வாழையடி எனும் தொகுப்பில் இருந்து வாழை திரைப்படத்தில் வரும் பிரச்னைகளை கதையாக எழுதி இருப்பேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத் தான், அவர் காட்சி ஊடகத்தில் வாழை எனும் திரைப்படமாக காட்சிப்படுத்தியுள்ளார். 


ஒரே பிரச்சனையை பல்வேறு வடிவங்களில் கையாண்டு உள்ளோம். என்னுடைய கதை வாழைப்படமாக வந்திருப்பது மகிழ்ச்சிதான். கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவும் இல்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.


வாழை தனது சிறு வயது கதை என அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், எழுத்தர் சோ. தர்மனின் இந்த பேச்சு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தக் குற்றாச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.


இந்த நிலையில், இது தன்னுடைய கதைதான் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.


அதில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி, "எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH அமமுக கைது தேவர் சீமான் வன்னியர் தமிழ்நாடு THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA ஓபிஎஸ் ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி