Tamil News & polling
சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல்நலக் குறைவால் காலமானார்.நடிகர், அரசியல் விமர்சகர், துக்ளக் இதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்ட சோ ராமசாமி கடந்த 2016-ல் காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார் சோ ராமசாமி. 1999 முதல் 2005 வரை மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக இருந்த இவர் தனது 82 வயதில் மாரடைப்பால் காலமானார்.
இவருடைய மறைவுக்குப் பிறகு மனைவி சௌந்தரா ராமசாமி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளார்கள். இவருடைய இறுதிச் சடங்கு நாளை முற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகர், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் சௌந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu TTV Dhinakaran MK Stalin எடப்பாடி பழனிசாமி ADMK திருமாவளவன் AIADMK மு.க.ஸ்டாலின் AMMK தமிழ்நாடு Thirumavalavan அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் செங்கோட்டையன் Anbumani Ramadoss சீமான் முக ஸ்டாலின் Sengottaiyan PMK Seeman வடகிழக்கு பருவமழை Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam பாமக சட்டசபை தேர்தல் Congress