POLLING FLAMES

 

வயநாட்டில் 200 வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி கொடுக்கப்படும்- ராகுல் காந்தி

1 year ago 02 ஆகஸ்ட் 2024 09:50 AM | views : 228
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று காலையில் வயநாட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்புச் செயலாளர்கே.சி. வேணுகோபால், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று விவாதித்தனர். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் 200 வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

ஒரே இடத்தில் இடம் வாங்கி அதில் ஒரு குடியிருப்பு போல் வீடுகளை கட்டவும் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் செலவில் கட்டவும் திட்டமிட்டுள்ளார்கள்.இந்த கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது நிலவரம் மற்றும் மீட்பு பணிகள் பற்றியும் கேட்டறிந்தார்.

மேலும் காங்கிரஸ் குடும்பத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 200 வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை பாமக PMK தமிழகம் CONGRESS INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக கைது OPS AJITH வன்னியர் KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் தேவர் BIGG BOSS TAMIL SURIYA தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா ஓபிஎஸ் கொரோனா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI THIRUMAVALAVAN நெல்லை தீபாவளி தென்காசி பாலியல் தொல்லை ELECTION COMMISSION அஜித் தூத்துக்குடி RAJINIKANTH கள்ளக்காதல் CSK விடுமுறை கீர்த்தி சுரேஷ் மதுரை அன்புமணி வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம்