POLLING FLAMES

 

வயநாடு நிலச்சரிவு: 2 பள்ளிகளில் படித்த மாணவர்களில் 27 பேர் பலி; 23 பேர் மாயம்

1 year ago 02 ஆகஸ்ட் 2024 12:23 AM | views : 218
கேரளாவின் வயநாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் சிக்கினர். இந்த பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்வடைந்து உள்ளது.நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியானார்கள். 23 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி மற்றும் சூரல்மலா கிராமத்தில் உள்ள வெள்ளர்மலா பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்றும் நிலச்சரிவால் கடுமையாக சேதமடைந்தன. இதில், சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும், முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இரு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, கல்வி துறை அதிகாரிகள் கூட்டம் ஒன்றை இன்று (வெள்ளி கிழமை) நடத்த உள்ளனர். இதில், உயிர் தப்பிய மற்றும் மீட்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக கனமழை ரஜினிகாந்த் PMK CONGRESS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை தமிழகம் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் சீமான் தேவர் AJITH KEERTHY SURESH கைது OPS தமிழ்நாடு அமமுக பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL NELLAI நெல்லை கொரோனா சூர்யா SURIYA விடுமுறை கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை RAJINIKANTH தென்காசி வடகிழக்கு பருவமழை திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION அன்புமணி தீபாவளி கீர்த்தி சுரேஷ் அஜித் தூத்துக்குடி