POLLING FLAMES

 

வெண்கலம் வென்றார் ஸ்வப்னில்: இந்தியாவுக்கு 3வது பதக்கம்!

1 year ago 02 ஆகஸ்ட் 2024 12:21 AM | views : 232
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "இந்த பதக்கம் மராட்டியத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியம் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை PMK காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் AJITH தமிழ்நாடு தேவர் சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் பிரதமர் மோடி KEERTHY SURESH OPS அமமுக கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA TAMIL ACTRESS சூர்யா ஓபிஎஸ் THIRUMAVALAVAN நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா விடுமுறை அஜித் தீபாவளி கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை