POLLING FLAMES

 

வசமாக சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி.. ஆட்டத்தை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு..!

1 year ago 20 ஜூன் 2024 11:01 AM | views : 215
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டி இதன் மூலம் வசமாக சிக்கி உள்ளார்.

அதாவது, சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரச்சனைகளும் வந்த வண்ணமே இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டவுசர் மூலம் போலீசார் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த விஷயம். இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ரூபாய் 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாவை தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் பார்வையிட்டார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி x சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெலுங்குதேசம் கட்சி தற்போது தெரிவித்திருக்கிறது. விலை உயர்ந்த கண்ணாடிகள், கிரானைட் கல் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டுள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். மொத்தம் 500 கோடி வரை செலவு செய்து ஜெகன்மோகன் ரெட்டி இந்த பங்களாவை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தேவர் வன்னியர் OPS சட்டசபை தேர்தல் SURIYA AJITH THIRUMAVALAVAN நெல்லை கொரோனா சூர்யா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் CSK தூத்துக்குடி அன்புமணி தென்காசி விடுமுறை மதுரை திருப்பரங்குன்றம் தீபாவளி அஜித் பாலியல் தொல்லை RAJINIKANTH