POLLING FLAMES

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கு மூளையே இல்லை.. சோயப் அக்தர் தாக்கு

1 year ago 10 ஜூன் 2024 12:34 PM | views : 221
இந்தியாவுக்கு எதிரான 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதனால் கண்டிப்பாக இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்பினர்.





ஆனால் சேசிங் செய்த அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். அதனால் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்று சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்தார்





இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் 120 பந்துகளில் நிதானமாக விளையாடி சிங்கிள், டபுள் ரன்களாக எடுத்திருந்தால் கூட 120 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வென்றிருக்க முடியும் என்று சோயப் அக்தர் வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.





ஆனால் தங்கள் வீரர்கள் யாருமே மூளையை பயன்படுத்தி விளையாடவில்லை என்று வருத்தத்தை தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு பந்துகளுக்கு நிகரான ரன்கள் எடுக்கும் எளிய வாய்ப்பு இருந்தது. முதலில் இந்திய அணி தங்களுடைய மிடில் ஆர்டரில் சொதப்பியது. 11 ஓவரில் 80 ரன்கள் எடுத்த இந்தியா எளிதாக எடுத்திருக்க வேண்டிய 160 ரன்களை தொடவில்லை”





“ஆனால் பாகிஸ்தானுக்கு அதை தொடுவதற்கு நெருங்கிய வாய்ப்பு இருந்தது. முகம்மது ரிஸ்வான் இன்னும் 20 ரன்கள் அடித்து பாகிஸ்தானை எளிதாக வெற்றி பெற வைத்திருந்திருக்கலாம். ஆனால் சோகம் என்னவெனில் நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தவில்லை. பாகிஸ்தான் அணியில் நிறைய கேள்விகள் இருக்கிறது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் வென்றிருக்க வேண்டும்”








“கடைசி 47 பந்துகளில் வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது பஃகார் ஜமான் களத்தில் இருந்த நிலையில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை வைத்திருந்தது. ஆனாலும் நம்மால் அதை எடுக்க முடியவில்லை. அதனால் நான் வார்த்தைகள் இன்றி மிகவும் உடைந்துள்ளேன். அவ்வளவு தான்” என்று கூறினார். அந்த வகையில் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது பரம எதிரி இந்தியாவிடமும் வீழ்ந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் PMK பாமக முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கைது KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் அமமுக OPS வன்னியர் NELLAI தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சூர்யா நெல்லை SURIYA AJITH BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN விடுமுறை ELECTION COMMISSION அஜித் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை தென்காசி கள்ளக்காதல் CSK அன்புமணி மதுரை தீபாவளி திருப்பரங்குன்றம் RAJINIKANTH தூத்துக்குடி