POLLING FLAMES

 

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

1 year ago 07 மே 2024 04:36 AM | views : 214
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனையில் ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என தெரியவந்துள்ளது. ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே ஜெயக்குமார் மரணம் தொடர்பாக முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு இன்று நெல்லை மாவட்ட காவல்துறை முன்பு ஆஜராகிறார். முன்னதாக, 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் மரணத்துக்கு முன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் தொடர்புடையவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM காங்கிரஸ் பாமக ரஜினிகாந்த் கோவை CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கொலை தமிழகம் திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் வன்னியர் KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு OPS அமமுக தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது கொரோனா TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA சூர்யா ஓபிஎஸ் நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN AJITH அஜித் ELECTION COMMISSION கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை CSK மதுரை அன்புமணி தென்காசி வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி பாலியல் தொல்லை RAJINIKANTH