POLLING FLAMES

 

கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை; கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்

2 years ago 02 ஏப்ரல் 2024 04:50 PM | views : 231
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரியாக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில், "மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹவாலா பணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கிடைக்கப் பெற்று அதை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தல் பணிக்காக பயன்படுத்தினார்கள். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்டுகளை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்" எனச் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், அவருடைய கைப்பேசியை ஹாக்கிங் தெரிந்த சாஃப்ட்வேர் நிபுணர்கள் மூலம் அமலாக்கத் துறை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை அணுகி திறக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.இதற்காக அமலாக்கத் துறை ஆப்பிள் ஐபோனை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில், 'உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது' என அந்நிறுவனத்தில் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI தமிழகம் பிரதமர் மோடி KEERTHY SURESH கைது TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு வன்னியர் அமமுக சீமான் தேவர் OPS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI சூர்யா நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் TAMIL ACTRESS SURIYA BIGG BOSS TAMIL மதுரை அஜித் ELECTION COMMISSION RAJINIKANTH கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தென்காசி அன்புமணி விடுமுறை CSK தீபாவளி பாலியல் தொல்லை தூத்துக்குடி