POLLING FLAMES

 

பஸ்சை வழிமறித்து 2 திருநங்கைகள் ரகளை - போலீஸ்காரர் மீது தாக்குதல்

2 years ago 16 மார்ச் 2024 09:37 AM | views : 232
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.

மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர். அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர்.

திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM பாமக PMK CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது சீமான் OPS KEERTHY SURESH ஓபிஎஸ் AJITH THIRUMAVALAVAN TAMIL ACTRESS சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI நெல்லை SURIYA அஜித் விடுமுறை ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி தென்காசி CSK கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் தீபாவளி