POLLING FLAMES

 

முக்குலத்தோர் சமுதாயத்தை தேவர் என அழைக்கக் கோரிய மனு தள்ளுபடி

2 years ago 29 ஜனவரி 2024 04:18 PM | views : 260
முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்கக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ”தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற ஒரே பெயரில் அழைக்கக்கோரி 11.9.1995-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தப்படவில்லை.


தேவர் என்ற பெயரில் அழைக்கப்படாததால் கள்ளர், அகமுடையார் பிரிவினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும், பிரமலைக் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலும் உள்ளனர். எனவே, கள்ளர், மறவர், அகமுடையார் கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை ‘தேவர்' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளாகியும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தை நீதிமன்றம் பூர்த்தி செய்ய முடியாது. மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை தமிழகம் திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு வன்னியர் அமமுக OPS சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது KEERTHY SURESH தேவர் தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கொரோனா SURIYA AJITH ஓபிஎஸ் NELLAI நெல்லை சூர்யா விடுமுறை வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் அன்புமணி அஜித் தூத்துக்குடி கள்ளக்காதல் CSK தீபாவளி கீர்த்தி சுரேஷ் மதுரை தென்காசி RAJINIKANTH பாலியல் தொல்லை