POLLING FLAMES

 

காளஹஸ்தி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

3 years ago 18 பிப்ரவரி 2023 05:24 AM | views : 257
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன.இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது.

மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS இந்திய அணி UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக கனமழை ரஜினிகாந்த் PMK CONGRESS முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் திருமாவளவன் வன்னியர் தேவர் சீமான் KEERTHY SURESH OPS கைது தமிழ்நாடு அமமுக பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM AJITH தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS NELLAI நெல்லை கொரோனா சூர்யா SURIYA விடுமுறை அன்புமணி மதுரை தென்காசி RAJINIKANTH திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை CSK கள்ளக்காதல் தீபாவளி பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் அஜித் தூத்துக்குடி ELECTION COMMISSION