POLLING FLAMES

 

இரட்டை சத்தம் விளாசிய சுப்மன் கில்…

3 years ago 18 ஜனவரி 2023 12:10 PM | views : 233
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் பேட்ஸ்மேன் சுப்மன் கில், இன்று  விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார். ஒரே ஒரு இன்னிங்சில் அவரது உலக சாதனை தவறியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் 87 பந்துகளில் சதமடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சுப்மன் கில் சதமடித்தார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரன் குவித்து, அதன் மூலம் விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை சுப்மன் கில் முறிடியத்துள்ளார். அதாவது ஒருநாள் போட்டிகளில் வெறும் 19 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 1000 ரன்களை அவர் கடந்துள்ளார். விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு 1000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுக்க, 24 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் அணியை சேர்ந்த பகர் சமான் முதலிடத்தில் உள்ளார். இவர் 18 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்து இருக்கிறார்.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 1000 ரன்களை கடந்தவர் பட்டியலில், இரண்டாம் இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளார். 23 வயதாகும் சுப்மன் கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS தமிழ்நாடு கைது சீமான் வன்னியர் KEERTHY SURESH AJITH தேவர் அமமுக TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA நெல்லை NELLAI ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை அஜித் கள்ளக்காதல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தீபாவளி தென்காசி CSK