POLLING FLAMES

 

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்.. விடுமுறையை நீட்டித்து அறிவிப்பு!

3 years ago 01 ஜனவரி 2023 04:43 PM | views : 258
பள்ளிகளுக்கு குளிர் கால விடுமுறையை ஒருவாரம் நீட்டித்து பஞ்சாப் மாநில அரசு விடுமுறையை அளித்துள்ளது.

பஞ்சாப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையாக டிசம்பர் 25 (2022) முதல், ஜனவரி 1 (2023) ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் காலநிலை காரணமாக அந்த மாநிலத்தில் இருக்கும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 7ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் ஜனவரி 2ம் தேதி முதல் 14 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவும் லக்னோவில் டிசம்பர் 31 வரை பள்ளிகளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் எதிரொலியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS தமிழகம் முக ஸ்டாலின் திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS தமிழ்நாடு கைது சீமான் வன்னியர் KEERTHY SURESH AJITH தேவர் அமமுக TAMIL ACTRESS THIRUMAVALAVAN கொரோனா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL SURIYA நெல்லை NELLAI ஓபிஎஸ் சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மதுரை அஜித் கள்ளக்காதல் விடுமுறை RAJINIKANTH அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தீபாவளி தென்காசி CSK