POLLING FLAMES

 

துணிவு படத்தில் 32 நொடிகளில் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி!

3 years ago 26 டிசம்பர் 2022 10:24 AM | views : 267
துணிவு படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் வேடத்தில் நடித்துள்ளதாக அப்பட இயக்குநர் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக அஜித் படங்களில் சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் இருக்கும். அதற்கேற்ப இப்படத்தின் சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் தொடர்பாக சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில், 360 டிகிரி ஸ்டண்ட் டெக்னிக்கை கொண்டு 32 விநாடிகளில் ஒரே டேக்கில் நடிகர் அஜித்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறிது தவறினாலும் அந்தக் சண்டைக்காட்சியை மீண்டும் படமாக்க வேண்டும், முதல் சில டேக்குகள் சரியாக வரவில்லை, 13வது டேக்கில் சரியாக படமாக்கப்பட்டது. நடிகர் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார் எனவும் அவர் தெரிவித்தார்.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர் சிபி, பாவனி, அமீர், பக்ஸ் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்,

ஜிப்ரான் இசையில் இப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா என 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.


துணிவு படத்துக்காக அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM பாமக PMK CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி கைது சீமான் OPS KEERTHY SURESH ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL AJITH கொரோனா NELLAI நெல்லை SURIYA அஜித் விடுமுறை ELECTION COMMISSION பாலியல் தொல்லை தூத்துக்குடி தென்காசி CSK கள்ளக்காதல் RAJINIKANTH திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை கீர்த்தி சுரேஷ் தீபாவளி