POLLING FLAMES

 

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி

3 years ago 03 டிசம்பர் 2022 05:07 AM | views : 274
வெண்ணிலா கபடி குழு திரைப்பட நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். 

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர் ஹரிவைரவன். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பிரபல காமெடி ஆன பரோட்டா காமெடியில் ஹரிவைரவன் நடித்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், இரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக நடிகர் அம்பானி சங்கர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் "ஹரி வைரவன் " இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.



மதுரையை சேர்ந்த ஹரிவைரவன் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலையில் அதிக அளவு பிரச்சனை இருந்த காரணத்தினால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வந்த, ஹரி வைரவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதுரையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. முக்கிய நடிகர் மற்றும் நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH அமமுக கைது தேவர் சீமான் தமிழ்நாடு வன்னியர் THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி